MARC காட்சி

Back
அருள்மிகு யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
245 : _ _ |a அருள்மிகு யோகநரசிங்கப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a யானைமலை, பெருமாள் குடைவரை
520 : _ _ |a யானைமலையில் உள்ள யோக நரசிங்கப் பெருமாள் கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் முற்காலப் பாண்டியரின் கலைப்பாணியாகும். கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.
653 : _ _ |a யானைமலை, ஒத்தக்கடை, நரசிங்கப்பட்டி, நரசிங்கப் பெருமாள் கோயில், யோக நரசிம்மர், குடைவரை, முற்காலப் பாண்டியர், மாறன் காரி, பராந்தக நெடுஞ்சடையன், மதுரை மாவட்டக் கோயில்கள்
700 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
710 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
902 : _ _ |a 98420 24866
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/ முதலாம் பராந்தக நெடுஞ்சடையப் பாண்டியன்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. குடைவரைக் கோயிலாகும். தாய்ப்பாறையிலேயே மூலவர் நரசிம்மர் உருவம் யோகநிலையில் காட்டப்பட்டுள்ளது.
914 : _ _ |a 9.96756144
915 : _ _ |a 78.18968649
916 : _ _ |a யோகநரசிம்மர்
917 : _ _ |a நரசிம்மர்
918 : _ _ |a நரசிங்கவல்லித் தாயார்
923 : _ _ |a சக்கர தீர்த்தம்
925 : _ _ |a விச்வரூபம், பொங்கல் காலம், சாயரட்சை, உச்சிகாலம், நித்திய அனு சந்தான கோஷ்டி, சம்பாக்காலம்
926 : _ _ |a மாசிப் பௌர்ணமி கஜேந்திர மோட்சம், பௌர்ணமி கிரிவலம், நரசிம்ம பிரதோஷ பூஜை
927 : _ _ |a ‘‘கோமாறஞ் சடையற்கு உத்தரமந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மஹங்காரி இக்கற்றளி செய்து நீர் தெளியாதேய் சுவர்க்க ஆரோணேஞ் செய்த பின்னை அவனுக்கு அநுஜன் உத்திர மந்திரி பதமெய்தின பாண்டியமங்கல விசைய அரையன்ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ்செய்து நீர் தெளித்தான்’’ கருவறையின் இடப்புறம் காணப்பெறும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு, ‘‘கோமாறஞ் சடையற்கு உத்தரமந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறங்காரி இக்கற்றளி செய்து நீர் தெளியாதேய் சுவர்க்க ஆரோணேஞ் செய்த பின்னை அவனுக்கு அநுஜன் உத்திர மந்திரி பதமெய்தின பாண்டியமங்கல விசைய அரையன்ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ்செய்து நீர் தெளித்தான்’’ – என்கிறது. ஆனைமலையில் விஷ்ணுவுக்காக இக்குடைவரைக் கோயில் கலியாண்டு 3871 முடிவுற்ற மறு ஆண்டில், அதாவது, கி.பி.770-ல் மாறஞ்சடையன் எனப்பெறும் முதலாம் வரகுண பாண்டியனின் மந்திரியும் மாறன் என்பவனின் மகனும் சிறந்த வைத்திய குடும்பத்தைச் சார்ந்தவனுமாகிய மதுரகவி என்றழைக்கப்பெற்ற களக்கடி என்ற ஊரில் பிறந்த மூவேந்த மங்கலப் பேரரையனாகிய மாற மறாங்காரி என்பவனால் இக்குடைவரை தோற்றுவிக்கப்பெற்றது என்பதறிகிறோம். மேலும், அவன் இங்கு நரசிம்மரின் திருமேனியைத் தோற்றுவித்தான் என்றும் கூறப்பெற்றுள்ளது. குடைவரைக் கோயிலையும், நரசிம்மரையும் தோற்றுவித்த மதுரகவியாகிய மாறங்காரி என்னும் அப்பாண்டிய அமைச்சன் கோயிலுக்கு நீர் தெளித்து (சம்ரோக்ஷணம்) நன்மங்கலம் செய்வதற்கு முன்பாகவே இறந்துபட்டதால் அவன் தம்பியும் பாண்டியனின் மந்திரியுமாகிய பாண்டிய மங்கல விசையரையன் எனப்பெறும் மாறன் எயினன் என்பான் இக்குடைவரைக் கோயிலுக்கு முகமண்டபம் கட்டுவித்ததோடு நீர் தெளித்து கடவுள் மங்கலம் செய்து வழிபாடு மேற்கொள்ளுமாறு செய்தான் என்பதும் அறிகிறோம்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். நரசிம்மர் இரு கைகளை முன் நீட்டியபடி யோகபட்டத்தில் அமர்ந்துள்ளார். சிம்ம முகத்துடன் காணப்படும் நரசிம்மர் தாய்ப்பாறையிலேயே செதுக்குவிக்கப்பட்ட மிகப்பெரிய கற்சிற்பமாகும். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது[2].[3]. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
930 : _ _ |a உரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கிய வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க விரும்பினாரர். முனிவரின் விருப்பத்தை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தைக் கூறினர் தேவர்கள். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. யோக நரசிம்மராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
932 : _ _ |a இக்கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். யானைமலையைக் குடைந்து செய்விக்கப்பட்டதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்த பாண்டியர் காலத்திய கலைப்பாணியை உடையது. மூலவர் தாய்ப்பாறையிலேயே செய்விக்கப்பட்டுள்ளார். சிறிய அர்த்தமண்டபமும், முன் மண்டபமும் குடைவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a இலாடன் (முருகன் குடைவரை) கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திருச்சுனை அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
935 : _ _ |a மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a மாட்டுத்தாவணி, யானைமலை ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள், மேலூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000105
barcode : TVA_TEM_000105
book category : வைணவம்
cover images TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_உற்சவர்-0007.jpg :
Primary File :

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_கோயில்-தோற்றம்-0001.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_சுவர்-அமைப்பு-0002.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_மதிற்சுவர்-கருடன்-0003.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_மூலவர்-யோகநரசிம்மர்-0004.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_மூலவர்-யோகநரசிம்மர்-0005.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_உற்சவர்-0006.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_உற்சவர்-0007.jpg

TVA_TEM_000105/TVA_TEM_000105_யோகநரசிம்மர்-கோயில்_நரசிங்கவல்லித்-தாயார்-0008.jpg